யாழில் பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது!! மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்

பாணின் விலையை தற்போது குறைக்க முடியாது என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் செயலாளர் வசந்தசேனன் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முன்னர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பாண் ஒரு இறாத்தல் 220 தொடக்கம் ரூபா 250 ரூபா வரை விற்பனை செய்தனர்.

எனினும் அப்போது யாழ்ப்பாணத்தில் பாண் விலையை கட்டுப்படுத்தி 200 ரூபாவிற்குள் விற்க சம்மதித்தோம்.

எனவே தற்போதைய 10 ரூபா விலை குறைப்பை செய்ய முடியவில்லை.

கோதுமை மா விநியோக நிறுவனங்களான பிறீமா மற்றும் செரண்டிப் ஆகியன, மாவின் விலையை குறைதால் நாமும் பாண் விலையை குறைப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts