யாழில் பல பகுதிகளில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளில் வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஆறுகால்மடம் பொன்னையவீதி, கொக்குவில் பிரம்படி வீதி, ஆறுகால்மடம் புதுவீதி ஆகிய பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் வாள்களுடன் புகுந்த குழுவினர், வீட்டை அடித்து நொருக்கி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளதுடன் வீட்டொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை உடைத்துஅதனையும் தீயிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மரணச் சடங்கொன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கொடிகாமம் பருத்திதுறை வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து பருத்திதுறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மீதும் நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts