யாழில் நிறைவடையும் கொரோனா காலம்: ஒரு வாரமாக தொற்றாளர்கள் இல்லை!

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தில் ஒருவரும் கொரோனா தொற்றில் அடையாளப்படுத்தப்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை.

அதேநேரம், கொரோனா சந்தேகத்தில் தற்போதும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts