யாழில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியில் இருந்து பொருட்கள் மாயம்

யாழ். நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.யாழ். நகரில் உள்ள ஹட்டன் நசனல் வங்கிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்து 73 ஆயிரத்து 208 ரூபா பெறுமதியான பொருட்கள் களாவாடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிவித்ததாவது, தென்பகுதி எப்பாவல பகுதியை சேர்ந்த இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள கடைகளுக்கு பொருட்களை கொண்டுவந்து வழங்குபவர்கள்.

அன்றைய தினம் யாழ். நகரில் உள்ள ஹட்டன் நசனல் வங்கிக்கு அருகில் லொறியினை நிறுத்தி விட்டு சாப்பாட்டுக்காக கடைக்குச் சென்றிருந்த சமயமே லொறியின் பின் கதவு திறக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டது என முறைப்பாட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நீதிமன்றிலும் இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts