யாழில் நடைபெற்ற அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான கருத்தரங்கு

ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இரண்டாவது வழிகாட்டல் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முதன்மை அரசியல் அதிகாரி போல் காட்டர் தம்பதியினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்துரைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு.குருபரன், யாழ் பல்கலைக் கழக பொருளியல்துறைத் தலைவர் ஆகியோரும் நடத்தினர்.

முதற் கட்டமாக கிளிநொச்சியில் நடைபெற்ற இச் செயலமர்வானது இரண்டாவது முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இக்கருத்தமர்வில் தலைமை தங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமை தாங்கி உரையாற்றுகையில்,

எங்களுடைய இளைஞர்கள், யுவதிகள், ஆர்வலர்கள் மத்தியில் தமிழர்களுடைய இனம் ரீதியான எங்களுடைய பிரச்சினை தொடர்பாக, நாங்கள் எதிர்காலத்தில் அடைய வேண்டிய இலக்குத் தொடர்பாக, ஜனநாயக அடிப்படையில் எவ்வாறு நாங்கள் வழிநடத்திச் செல்லப்பட வேண்டும் என்ற விடையங்களை தமிழர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியதன் தேவையை உனர்ந்தே மேற்படித் கருத்தமர்வு நடாத்தப்படுகின்றது.

Related Posts