யாழில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மருத்துவ அறிக்கைகள் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு!

பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் நேற்று வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் மருத்துவ மாதிரிகள் மற்றும் அறிக்கைகளை அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் நெருக்கமான தொடர்பை பேணிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த 22ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களைக் கடந்த முதலாம் மற்றும் 2ஆம் திகதிகளில் பத்துப் பத்து பேராக பரிசோதனைக்கு உட்படுத்திய போது, முதல் நாள் 3 பேரும் மறுநாள் 3 பேரும் என 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார்கள் என அடையாளம் காணப்பட்டனர். 14 பேருக்கு தொற்று இல்லை என அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் அன்றைய தினம் தொற்று அடையாளம் காணப்படாத 14 பேரையும் இரண்டாம் கட்டமாக நேற்று பரிசோதித்த போது, அவர்களில் 8 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மேலதிக பரிசோதனைக்காக குறித்த 8 பேரினுடைய மருத்துவ மாதிரிகள் மற்றும் பரிசோதனை அறிக்கைகள் என்பவற்றை யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக அநுராதபுரம் மருத்துவப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related Posts