யாழில் தொடரும் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டாசகம்!

யாழில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டாசகம் நேற்று இரவும் அரங்கேறியுள்ளது.

தென்மராட்சி- சரசாலை தெற்குப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வாள்களுடன் குறித்த பகுதியின் வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, வீட்டையும், அங்கிருந்த உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

கனடா நாட்டிலிருந்து வந்து சரசாலை தெற்கு பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்தவரின் வீட்டிலேயே வாள்வெட்டு குழுவினர் இவ்வாறு தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாள்வெட்டு சம்பவங்களுக்கு மத்தியில் யாழில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts