ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆவா குழு உறுப்பினர்கள் என போலியாக தமது பிள்ளைகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழில் அண்மையில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.