யாழில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 15 முறைப்பாடுகள்!!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதான் பின்னர் இன்றுவரை 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பயிறுள்ளன.

அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறியதற்கான முறைப்பாடுகள் ஆகும். எனினும் ஒரேயொரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது. அது அண்மையில் தென்மராட்சியில் இடம்பெற்ற தனியார் ஊடக நிறுவன தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. இதனை விட பாரிய சம்பவங்கள் எவையும் இதுவரை பதிவாகவில்லை.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினை கவனத்தில் எடுத்து அரசியல் கட்சிகளும்,சுயேட்சைக் குழுக்களும் சுகாதார முயறைகளை பின்பற்ற வேண்டும்.

அதேபோல் வாக்காளர்களும் சுகாதார முறைகளை பின்பற்றுவது அவசியமானது ஒன்றாகும்.தேர்தல் சட்ட விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள் வழங்கிவிட்டு வேட்பாளர்கள் அதனை முகப்புத்தகத்தில் பதிவிட்டாலும் அதுவும் தேர்தல் விதிமுறை மீறலே எனவே வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தை மதித்து ஜனநாயக தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Related Posts