யாழில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினானாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

குறித்த இடங்களில் ‘சட்டமுரணான அறிவித்தல்’, ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்போம்! சட்டமீறலை எதிர்ப்போம்! போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலில் பிரசார நடவடிக்கைகளுக்காக தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் ஒட்டுவது சட்டத்திற்கு முரணானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts