யாழில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

gun-fireயாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலொலி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

மூவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதலினால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts