சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 78 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மணமக்கள் குடும்பத்தினரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினர் உட்படுத்தியுள்ளனர்.