யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்கள் இன்று முதல் ஆரம்பித்த பகிஸ்கரிப்பினால் ஆங்கில புதுவருட கொள்வனவில் ஈடுபட பல இடங்களில் இருந்து யாழ்ப்பாண நகருக்கு வருகை தரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் இன்று காபொ.த சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள் மதிப்பிடும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்று வருகின்றன.
மேற்படி மதிப்பீட்டுப் பணிகளுக்காக வெளியிடங்களில் இருந்து வருகை தரும் ஆசிரியர்களும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.