யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பரிசோதனை முடிவு வெளியானது!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதியானது.

இந்திய புடவை வியாபாரியுடன் தொடர்புடைய 5 வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லையென்பது உறுதியானது.

இதேவேளை, புடவை வியாபாரி உள்ளிட்ட குழுவினரை பேருந்தில் கொழும்பிற்கு அழைத்துச் சென்ற யாழிலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகள் சிலர், சுயதனிமைப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது. எனினும், இது குறித்த அறிவிப்பெதுவும் வடக்கு சுகாதார திணைக்களத்திற்கு அறிவிக்கப்படவில்லை.

Related Posts