யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில் தந்தையை இழந்த சிறுவர்கள் 4,679 பேரும் தாயை இழந்த சிறுவர்கள் 1,053 பேரும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தந்தையை இழந்த நிலையில் நெடுந்தீவில் 101 சிறுவர்களும் வேலணையில் 226 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 179 சிறுவர்களும் காரைநகரில் 123 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 381 சிறுவர்களும் நல்லூரில் 301 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 530 சிறுவர்களும் சங்கானையில் 346 சிறுவர்களும் உடுவிலில் 503 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 364 சிறுவர்களும் கோப்பாயில் 186 சிறுவர்களும் சாவகச்சேரியில் 551 சிறுவர்களும் கரவெட்டியில் 354 சிறுவர்களும் பருத்தித்துறையில் 461 சிறுவர்களும் மருதங்கேணியில் 73 சிறுவர்களும் உள்ளனர்.
தாயை இழந்த நிலையில் நெடுந்தீவில் 27 சிறுவர்களும் வேலணையில் 56 சிறுவர்களும் ஊர்காவற்றுறையில் 20 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் 56 சிறுவர்களும் காரைநகரில் 38 சிறுவர்களும் நல்லூரில் 50 சிறுவர்களும் சண்டிலிப்பாயில் 145 சிறுவர்களும் சங்கானையில் 73 சிறுவர்களும் உடுவிலில் 13 சிறுவர்களும் தெல்லிப்பழையில் 67 சிறுவர்களும் கோப்பாயில் 121 சிறுவர்களும் கரவெட்டியில் 120 சிறுவர்களும் சாவகச்சேரியில் 109 சிறுவர்களும் கரவெட்டியில் 120 சிறுவர்களும் பருத்தித்துறையில் 113 சிறுவர்களும் மருதங்கேணியில் 45 சிறுவர்களும் உள்ளதாகவும் அவர் கூறினார்.