யாழில். டைனமேட் உபயோகித்து மீன் பிடிக்க நீதிமன்றம் தடை

judgement_court_pinaiயாழ். மாவட்டத்தில் டைனமேட் பாவனையை முற்றாக தடை செய்வதற்கான அறிவித்தல் விடுக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். கொட்டடி பகுதியில் வாடி ஒன்றில் டைனமேட் பாவித்து பிடிக்கப்பட்ட 600 கிலோ மீன்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் கைப்பற்றியதாக பணிப்பாளர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட மீன்கள் மற்றும் வாடி உரிமையாளரை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியவேளை, வாடி உரிமையாளரை பிணையில் விடுவித்ததுடன், பிடிக்கப்பட்ட மீன்களை கைப்பற்றி அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பிரகாரம், யாழ். மாவட்ட கடற்பரப்பில், டைனமேட் பாவித்து மீன் பிடிப்பது அதிகரித்து வருகின்ற காரணத்தினால், மீன் இனங்கள் அழிக்கப்படுவதாகவும், அந்த மீன்களை உண்பவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அமைவதனால், யாழ். மாவட்ட கடற்பரப்பில் டைனமேட் பாவித்து மீன் பிடிப்பதை முற்றாக தடை செய்வதற்கா அறிவித்தல்களை ஊடகங்களில் வெளியிடுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related Posts