யாழில் டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை முன்னெடுக்கத் திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திகதி கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்போடு கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தி அவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் 14 ஆம் திகதி அனைத்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் இந்த திட்டம் முன்னெடக்கப்படவுள்ளது.

அத்தோடு, 15 ஆம் திகதி அனைத்து பாடசாலைகள் (காலை), தனியார் கல்வி நிலையங்கள் (மாலை) மேற்குறித்த பகுதிகளில் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

Related Posts