யாழில் சோதனைச் சாவடிகளை அதிகரிக்க முடிவு

meeting_jaffna_police_jeffreeyவடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு யாழில் பொலிஸ் சோதனை சாவடிகளை அதிகரிக்கவுள்ளதாக யாழ்.பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற வாரந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 205 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 பேரும், அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 32, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 32 பேர், மதுபோதையில் வாகனம் செலுத்திய 15, திருடிய குற்றச்சாட்டில் 02, வீதி விபத்து 06, மதுபோதையில் கலகம் விளைவித்த 03, பொது இடத்தில் கலகம் விளைவித்தவர்கள் 10, சட்டவிரோத மது விற்பனை 08, திருடிய குற்றச்சாட்டில் 05, பாலியல் வன்முறை 01, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் 04, பாதுகாப்பு கருதி 03, கொள்ளை 08, ஏனைய குற்றங்களுக்காக 54 பேருமாக மொத்தம் 227 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்தி
சட்டத்திற்கு உட்பட்ட கட்சி பிரச்சாரங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு; எஸ்.எஸ்.பி

Related Posts