சுழிபுரம் சிறுமி படுகொலை: நீதிகோரி மாணவர்கள் வீதியில்!

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமிக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காட்டுப்புலத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும் மக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தி வரை பேரணியாக சென்றுள்ளனர்.

அங்கு சுழிபுரம் சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த முதலாம் தரத்தில் கல்வி பயிலும் ஆறு வயது சிறுமி, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், ஆள்நடமாட்டமற்ற பகுதியிலுள்ள கிணறொன்றினுள் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts