யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 163 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 11 பேரும், குடிபோதையில் கலகம் விளைவித்த 2 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேரும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 3 பேரும் திருட்டு குற்றச்சாட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்படுள்ளனர்.
இதேவேளை, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 24 பேர், சூழல் மாசடைதல் குற்றச்சாட்டில் 7 பேர், அடிகாயம் ஏற்படுத்திய 40 பேர், வீதி விபத்து குற்றச்சாட்டில் ஒருவர், பணமோசடி குற்றச்சாட்டில் ஒருவர், களவு பொருட்களை தன்வசம் வைத்திருந்த ஒருவர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் , சமாதானத்தினை சீர்குலைத்த 2 பேர், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த 2 பேர், திருட்டு மின்சார இணைப்பை ஏற்படுத்திய 5 பேர், பொது இடத்தில் கலகம் விளைவித்த மூவர், பொது இடத்தில் மது அருந்திய 10 பேர், காசோலை மோசடி குற்றச்சாட்டில் ஒருவர், ஏனைய குற்றங்களுக்காக 48 பேருமாக மொத்தம் 163 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.