ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கோலகலமாக ஆரம்பமாகி தொடர்ந்து 3நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
தென்னிலங்கை வர்த்தகர்கள் -யாழ்ப்பாண வர்த்தகர்களிடையே வர்த்தக ரீதியாக தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சி நடைபெறுகின்றது.
இன்று காலை 9மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்ற குறித்த கண்காட்சியின் ஆரம்பிப்பு நிகழ்வினூடாக விருந்தினர்கள் மேள,தாள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு யாழ்.மாநகர சபை மைதானத்தில் இடம்பெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக யாழ்.இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் கலந்து கொண்டு நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வுக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை கல்வி,அழகு,நிர்மாணம்,உபசரிப்பு,உணவு,பானவகை,பொதியிடல், வாகனங்கள்,தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்,நிதியியல் சேவைகள்,ஆடைத்துறை,விவசாயம்,நுகர்வோர் உற்பத்திகள் போன்ற பலதுறைகளைஉள்ளடக்கிய 250 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.