யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா நாளை செவ்வாய்க்கிழமை மாலை 05.30க்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
அத்துடன், இந்த நிகழ்வு நாளை மறுதினம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும் சுமார் 50 வரையிலான கதைப் படங்கள் மற்றும் ஆவண படங்கள், குறுந் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச நாடுகளின் திரைப்பட துறையைச் சர்ந்த ஏழு கலை ஆளுமைகளும் தொடக்கி வைக்கப்படவுள்ளன.
இந்த சர்வதேச திரைப்பட விழா ஆரம்ப நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், ஆரம்ப உரையாற்றவுள்ளார்.
தொடர்ந்து இசைஞர் காயத்ரீ ஹேமதாஸ “இசை சமர்ப்பணம்” என்ற இசை நிகழ்ச்சியை அவரது தந்தையான இசைச் சக்கரவர்த்தி பிரேமசிறி ஹேமதாஸவை நினைவு கூறும் நிகழ்வாக நடாத்தவிருக்கின்றார்.
அன்றைய தினம் “யூரோப்பியன் பனோரமாவின்” ஆரம்ப திரைப்படமான பியோனெக்ஸ் 98 (2014) என்ற ஜேர்மனிய திரைப்படம் திரையிடப்படவிருக்கின்றது.
இந்த ஆரம்ப நிகழ்வில், அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.