யாழில் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டினால் தண்டனை!

யாழ்ப்பாண நகரத்தில் சட்டத்துக்கு முரணான வகையில் குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரத்தின் முதன்மை வீதிகளான ஸ்ரான்லி றோட், கே.கே.எஸ் வீதி மற்றும் முதன்மை வீதி உட்பட பல்வேறு முக்கிய வீதிகளிலும் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்படுவதைப் பொலிஸார் தடுக்கவேண்டுமெனப் பலரும் வலியுறுத்திவருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts