யாழில் சடலங்கள் மீட்பு

இந்தப் பெண்ணுக்கு 5 மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தற்போது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெல்லிப்பளைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். வசவிலாள் சுகந்திரபுர பகுதியில் தீயில் கருகிய நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த சடலத்தில் தீக்காயங்கள் பல காணப்படுவதாகவும் இவரது மரணம் எவ்விதம் சம்பவித்தது என்பது தொடர்பாக உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

24 வயதான அர்ச்சுனன் தயாநிதி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவரது மரணம் தொடர்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதன் மூலம் குற்றவாளியை கைது செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts