யாழில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!!

குருநகர் பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய சக்திவாய்ந்த வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படைக் கட்டளைப் பிரிவினரால் நேற்று (17.10.2023) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பொதியிலிருந்து ஒரு கிலோகிராமும் 950 கிராமும் நிறையுடைய வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் ஒருவகை நூலும் குறித்த பொதியிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட குறித்த வெடிபொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts