யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பலி

யாழ்ப்பாணம் – அராலி,வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம்(29.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த, யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது 37) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும்(மெக்கானிக்) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (வயது 29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts