Ad Widget

யாழில் கோடுரம்!!! : 3வயது குழந்தை வெட்டிப் படுகொலை!!!

வண்ணார்பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோயிலடியில் 3 வயது பச்சிளம் பெண் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டாள்.

அவளது பேத்தியான குடும்பப் பெண் வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….

மன நோயாளி எனத் தெரிவிக்கப்பட்டவரே தனது இளைய சகோதரனின் மகளை வெட்டிக் கொலை செய்ததுடன், தனது தாயையும் வெட்டிச் சரித்தார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. கொலையாளி தானும் விசம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

தனுசன் நிக்சையா (வயது-3) என்ற குழந்தையே கொலை செய்யப்பட்டார். கொலைாளியான ஈஸ்வர் (வயது-33) தற்கொலை செய்துகொண்டார். அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அவரது தாயார் பரமேஷ்வரி (வயது-55) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts