யாழில் கூரிய வாள்களுடன் இளைஞன் கைது!

யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த வீட்டைச் சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 கூரிய கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த சந்தேகநபர் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் தனிநபர் தாக்குதல், மிரட்டல், காயப்படுத்துதல், திருடுதல் உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஆயுதக் கும்பலைச் சேர்ந்த இருவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரதான சந்தேக நபர் பற்றிய தகவல்கள் தெரியவந்ததை அடுத்து பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

Related Posts