யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 29ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மானிப்பாய், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, ஆணைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த போதே அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts