Ad Widget

யாழில் காவல்துறை பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு!

யாழ்ப்பாணத்தில் இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது.

Temple-murugan-karai-nagar

குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை காவல்துறையினர் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர்.

யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது ,

குறித்த ஆலயமானது கடந்த 1918ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வழிப்பாட்டினை மேற்கொண்டு வந்துள்ளனர். நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு சென்று தனி நபர் ஒருவர் ஆலயம் அமைந்துள்ள காணி தனக்கு உரித்துடையது எனவும் அதனால் ஆலயம் தனக்கு சொந்தம் என உரிமை கோரியுள்ளார்.

அதனால் குறித்த நபருக்கும் , ஆலயத்தில் வழிப்பாட்டினை மேற்கொண்டு வருவோருக்கும் மிடையில் கருத்து மோதல் இடம்பெற்று உள்ளது.

அதனை அடுத்து ஆலயத்தை உரிமை கோரிய நபர் ஊர்காவற்துறைர் காவல்துறையினர் மூலம் வழிப்பாட்டு மேற்கொள்வோரை மிரட்டி உள்ளார்.

அந்நிலையில் ஆலயத்தில் வழிப்பாடு மேற்கொண்டு வந்தோர் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நம்பிக்கை சொத்து சட்டத்தின் கீழ் கடந்த 12ம் திகதி வழக்கு தொடுத்தனர்.
தற்போது வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் ஆவணி ஞாயிறு இந்துக்களின் விரத தினமாகும். அதனை முன்னிட்டு ஆலயத்தில் பூஜை வழிப்பாட்டை மேற்கொண்டு வருவோர் , விஷேட பூஜை வழிப்பாட்டுக்கு ஏற்பாடுகள் செய்ந்திருந்தனர்.

அந்நிலையில் ஊர்காவற்துறை பொலிசார் சகிதம் ஆலயத்திற்கு வந்த ஆலயத்தை உரிமை கோரும் நபர், காவல்துறையினரின் உதவியுடன் பூஜை வழிப்பாடுகளை தடுத்து நிறுத்தியதுடன், ஆலயத்தினுள் இருந்த பொருட்களை வெளியில் வீசியும் ஆலய மூல மூர்த்தியாக இருந்த முருகனின் வேலினையும் பிடுங்கி எடுத்துள்ளனர்.

பின்னர் ஆலயத்தினை முழுமையாக இடித்து அழித்துள்ளனர். அதனை அடுத்து காவல்துறையினர் தாம் செல்லும் போது ஆலய மூல மூர்த்தியாக இருந்து பிடுங்கப்பட்ட முருகனின் வேலினை தம்முடன் எடுத்து சென்று உள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆலயத்தில் வழிப்பாட்டினை மேற்கொண்டு வந்தோர் தாம் கடும் மன வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள போது சட்டவிரோதமான முறையில் ஆலயம் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. அதற்கு காவல்துறையினர் உடைந்தையாக இருந்ததுடன், ஆலயம் இடித்தழிக்க பாதுகாப்பும் அளித்துள்ளனர்.

அத்துடன் இந்த ஆலயமானது ஆகம முறைப்படி வேல் பிரதிஸ்டை பண்ணி, பூஜை வழிப்பாடுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடாவடித்தனமாக மூல மூர்த்தியாக இருந்த வேலினை பிடுங்கி எடுத்துள்ளனர். இதனால் எமது ஊருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ எனவும் அச்சமாக உள்ளது என மேலும் தெரிவித்தனர்.

Related Posts