யாழ்ப்பாண நகரத்தில் உள்ள பிரபல விருந்தினர் விடுதியொன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு காவல்துறை அதிகாரிகளும் எதிர்பாராத விதமாகச் சந்தித்ததும் பழைய பகை இருவருக்கிடையில் வாய்த் தர்க்கமாக மாறி கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
இதனை அவதானித்த குறித்த விடுதி உரிமையாளர் இருவரையும் காவல்துறை நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரியொருவருக்கும், காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவருக்கும் இடையில் பணி நிமித்தம் காரணமாகவே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.