யாழில். காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

judgement_court_pinaiயாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் சட்ட முறைகளை வர்த்தகர்கள் கடைப்பிடிக்க தவறுவதுடன், காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது’ என்று யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

யாழ். நகரப்பகுதி வர்த்தக நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்ட வேளையில், 18 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

யாழ். நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 1 இலட்சத்தி 17 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 13 வர்த்தகர்களுக்கு ரூ.76 ஆயிரம் தண்டமும், 5 வர்த்தகர்களுக்கு ரூ. 41 ஆயிரம் தண்டமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் கூறினார்.

Related Posts