யாழில் காணி கோரும் இராணுவம்

யாழ். மாவட்டத்தில் இராணுவ படை முகாம் அமைப்பதற்காக அரச காணியொன்றைம் தருமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி விமல்ராஜ் தெரிவித்தார்.

இக்கோரிக்கையை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிமல் வி.புஞ்சிஹேவவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காணி சீர்திருத்த சட்டத்திற்கு அமைய காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவரினால் அனுமதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டால் இராணுவத்தினருக்கான காணி வழங்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts