யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணிகளை இழந்த 9 ஆயிரத்து 700 பேர் தொடர்ச்சியாக முகாம்களில் தங்கியிருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 6 ஆயிரத்து 581 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் பொதுமக்களின் 9 ஆயிரத்து 205 குடும்பங்களின் 6 ஆயிரத்து 239.2 ஏக்கர் காணிகளை ஆக்கிரமித்துள்ளனர்.
இவ்வாறே நிலைகொண்டிருக்கும் கடற்படையினர் 357 குடும்பங்களின் 318.1 ஏக்கர் காணிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்தோடு, 85 குடும்பங்களின் 23.74 ஏக்கர் நிலங்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதனால் காரணி உரிமையாளர்கள் நலன்புரி நிலையங்கள், உறவினர்களின் வீடுகள், நண்பர்களின் வீடுகள் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.