கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைக் கவசத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்திய 12 பேருக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றில் தலா ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கபட்டது.
சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட பரிசோதனையின் போது கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைகவசத்துடன் அணிந்து பயணித்தவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்குகள் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை அபராதம் விதிக்கப்பட்டது.
கறுப்புக் கண்ணாடி பொருத்தியுள்ள தலைக் கவசம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதாவும் கறுப்புக் கண்ணாடி பொருத்திய தலைகவசத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்துபவருக்கு முதல் தடவை ஆயிரம் ரூபாவும், இரண்டாம் தடவை இரண்டாயிரம் ரூபாவாகவும், மூன்றாம் தடவை மூவாயிரம் ரூபாவாகவும் அபராதம் விதிக்கப்படும்.
அதற்கு மேல் தவறிழைத்தால் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் பொலிசார் கண்டிப்புடன் கூறினர்.