யாழில் கனமழை!! மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை!!

யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

அதனால் கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மாண்டான் ஆகிய பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் அறிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் கல்லுண்டாய் சந்தியிலிருந்து அராலி வடக்கு வரையான பகுதியில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாயும்நிலை ஏற்பட்டுள்ளது. வழுக்கை ஆறு வாய்க்காலின் நீர் மட்டம் அதிகரித்ததாலேயே இந்த நிலைக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை வழுக்கை ஆறு வாய்காலின் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டு உள்ளன.

Related Posts