யாழில் கஞ்சா மற்றும் ஹெரொயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு துறை பொறுப்பதிகாரி ஜெரோசன் தலைமையிலான பொலிஸ் விசேட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12 கிலோ 300 கிராம் கஞ்சா போதைபொருட்கள் மீட்கப்பட்டுளளன.
அதேவேளை அச்சுவேலியைச் சேர்ந்த நபர் ஒருவரும் கஞ்சா போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கிலோ 385 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் மல்லாகம் புகையிரத நிலையத்தில் ஹெரொயின் போதைப்பொருளுடன் இருவரை காங்கேசன்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து 400 மில்லிகிராம் ஹெரொயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.