யாழில் ஒன்பதரை மணித்தியால மின்வெட்டு

powercutவீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், நாளை 11.01.2013 வெள்ளிக்கிழமை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் கரணவாய் அண்ணாசிலையடிப் பிரதேசம், மாலு சந்தி முதல் துலாக்கட்டு மடத்தடி வரையான பிரதேசம், சாமியன்அரசடி முதல் சம்மந்தர் கடை வரையான பிரதேசம், நயினாதீவு பிரதான வீதிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் நாளை மறுதினம் சனிக்கிழமை குஞ்சர்கடையின் ஒரு பகுதி, நவிண்டில், பொலிகண்டி, வல்வெட்டி, வல்வெட்டித்துறை, தொண்டமனாறு, உடுப்பிட்டி, நயினாதீவு பிரதான வீதிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related Posts