ஆவரங்கால் – நவோதயா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி தெற்கு பகுதி இளைஞர்களுக்கும் ஆவரங்கால் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தீர்த்து வைப்பதற்கு பெரியோர்கள் எடுத்த முயற்சியின்போதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.