யாழில் ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி இன்றைய தினம் குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதனபோது சந்தேகநபர்களான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் எஸ்.சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.


Related Posts