NORTHERNUNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முத்தவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
ஊடக சந்திப்பில் தென்னிந்தியாவின் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி தொடர்பான தகவல்களை தெரிவித்தார்.
இவ் இசை நிகழ்ச்சியானது டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முத்தவெளிஅரங்கிலே முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான நுழைவு சீட்டுகள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என ஏற்பாடு குழு தெரிவித்துள்ளது.
மேலும் யுத்தகால சூழல் மற்றும் கொரோனா தாக்கங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய வடக்கு, கிழக்கு மக்களின் மத்தியில் அவர்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் விதமாக எந்த ஒரு செயற்பாடுகளோ கலை நிகழ்வுகளுடன் பெற்றுள்ளது என கூற முடியாது.
அவ்வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாகவும் Magic groupஇன் யாழ் வருகையை பிரபல்யப்படுத்தும் நோக்கோடு பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிகரன் தலைமையிலான இசை நிகழ்ச்சி ஒன்றினை NothernUni யாழ்ப்பாணத்தில் வழங்க உள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.