யாழில் உவர்நீரை நன்னீராக்கும் நிலையம் கடற்படை தளபதியால் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் (ஆர்.ஓ பிளாண்ட்) திட்டம், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்னவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்திலேயே இந்த நன்னீராக்கும் திட்டம் எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு நன்னீராக்கும் திட்டங்களும் 7.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இலங்கை முழுவதும் 107 இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்.மாவட்டத்தில் 5 இடங்களில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts