யாழில் உள்ள 14 வீதிகளை காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டத்திற்கு இன்று அங்குராட்பணம்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செயற்திறன்மிக்க தலைமையின் கீழ் கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டலின் மூலம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற விஷேட 1 லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமிய வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் சிறப்பு வாய்ந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களது நேரடி சிபாரிசில் யாழ் மாவட்டத்தில் உள்ள ‘“ ஒவ்வொரு உள்ளூராட்சி தொகுதிகளுக்கும் ஒரு வீதி” என்ற வீதம் நேற்று (29) யாழ் மாவட்டத்தில் 14 வீதிகள் காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டம் இன்று கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரும் அங்கஜன் இராமநாதன் அவர்களது பிரத்தியேக செயலாளருமான கௌரவ சதாசிவம் இராமநாதன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று காலை நல்லூர் மாநகரசபை எல்லைக்குட்பட்ட 2km நீளமான மூத்தவிநாயகர் வீதியை காப்பெற் வீதியாக மாற்றும் செயற்திட்டத்தின் அங்குராட்பண நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் மாவட்ட பொறியாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர், J/109 கிராமசேவகர், J/109 அபிவிருத்தி உத்தியோகத்தர், மாநகர சபை உறுப்பினர்கள், முத்தவிநாயகர் சனசமூக நிலைய உறுப்பினர்கள், அப்பகுதி பொதுமக்கள் என கோவிட் – 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பலர் கலந்து கொண்டனர்.

Related Posts