யாழில் இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு

யாழில் வேலைவாய்ப்பு இன்றி உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர் தீர்மானித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே யாழ். மாவட்ட சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர் இவ்வாறு தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் பயிற்சி நெறிகளை முடித்த 182 மாணவர்களில் 160 பேர் யாழ். மாவட்டத்தில் மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களிலும் ஹோட்டல்களில் பணியாற்றி வருகின்றார்கள்.

அந்தவகையில், யாழ்.மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல்களில் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறையின் ஊடாக வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த தீர்மானித்துள்ளதுடன், வடமாகாணத்தின் அபிவிருத்தியையும் மேம்படுத்த முடியும்.

அந்தவகையில், வேலைவாய்ப்புக்கள் இன்றி உள்ள இளைஞர் யுவதிகள், ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான கற்கை நெறியினை பூர்த்தி செய்வதுடன், சர்வதேச நாடுகளிலும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர் யுவதிகள், வேலைக்கான விண்ணப்பங்களை யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறையினருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம், பதிவுகளை மேற்கொள்ளாமல் ஹோட்டல்களை நடாத்தி வருபவர்கள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள், தமது ஹோட்டல்களை பதிவு செய்யுமாறும் யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts