யாழில் இரு தரப்பினரிற்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

யாழ்.காரைநகர் பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் இரவு வாகனத்தின் மின் விளக்குகளை அணைக்காமல் சென்றதனால் இரு தரப்புக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து முறுகல் நிலை மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலை அவதானித்துக் கொண்டிருந்த 54 வயதான நா.தேவராஜா என்ற நபர் இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட குறித்த வயோதிபர் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மோதலில் ஈடுபட்டவர்களில் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts