யாழில் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும், மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.