யாழில் இராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ், சிங்கள மக்களை ஐக்கியப்படுத்தி இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட வேண்டு சோசலிச சமத்துவ கட்சியினர் தெரிவித்துள்ளது.
சோசலிச சமத்துவ கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ரி.சம்பந்தன் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு பொதுக்கூட்டம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், யாழ். மாவட்ட கூட்டுறவு சபையினர்; சோசலிச கட்சியினரிடம் கூட்டம் நடாத்த அனுமதிக்க வேண்டாமென்று இராணுவத்தினர் தெரிவித்ததாகவும், மண்டபத்தில் நடாத்துவதற்கான அனுமதியினை வழங்க முடியாதென்றும் மண்டப நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
இதனால் கூட்டம் மண்டபத்திற்கு வெளியே நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய சோசலிச சமத்துவ கட்சியின் முக்கியஸ்தர்கள்,
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் இராணுவ தடையிட்டினால் மண்டபத்தில் நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மண்டபத்தின் வெளிப்புறத்தில் பொதுக்கூட்டம் நடத்துகின்றோம்.
மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்ட நிலையில் அக்கட்சியின் கூட்டத்தினை நடாத்த அனுமதியில்லை என்று இராணுவம் தெரிவித்த நிலையில், யாழ். மாவட்டத்தில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றமை தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
அதேவேளை, யாழ். மாவட்டத்தில் முற்போக்கு அரசியல் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றதாகவும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அரசாங்கம் முற்போக்கு அரசியலை நடாத்தி வருகின்ற போதிலும், தொழிலாளி வர்க்கத்தினை அடக்க நினைக்கின்றதாகவும், மஹிந்த ராஜபக்ஷஷ அரசாங்கத்தின் முதலாளி வர்க்க அரசியலுக்கு எதிராக நாம் போராட வேண்டுமென்றும், அனைத்துலக தொழிலாளர் வர்க்கமும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் அழிந்து விட்டார்கள் என்று கூறிய அரசாங்கம் விடுதலைப்புலிகளின் தோல்விக்குப் பிறகு தழிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றது.
இந்நிலையில் தமிழ், சிங்கள மக்களை ஜக்கியப்படுத்தி இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட வேண்டுமென்றும்.
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சியின் பொதுக்கூட்டத்தினை நடாத்தவிடாது இராணுவம் தடைசெய்ததை வன்மையாக கண்டிப்பதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இதன்போது, இலங்கையில் சோசலிச சமத்துவ கட்சியின் வரலாற்று ‘சர்வதேசிய அடித்தளங்கள்’ எனும் நூல் அறிமுக விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சோசலிச சமத்துவ கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ரி.சம்பந்தன், மற்றும் சோசலிச சமத்துவ கட்சியின் மத்திய குழு உறுப்பினார் எம். தேவராஜா மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.