யாழில் இன்று முதல் தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் வடமகாணா சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி உள்பட துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திலேயே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களை இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Related Posts