யாழில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் என்1,எச் 1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று நேற்று யாழ். போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியாசாலையில் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 510 பேர் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை 95 பேர்களின் இரத்தப் பரிசோதனையை கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
எச்1, என் 1 என்பது இது புதியதாக இனங்காணப்பட்ட வைரஸ் காய்ச்சல் ஆகும். இருமல், தும்மல் போன்றவற்றால் பரவக்கூடிய வைரஸ் வகை ஒரு நீர் வைரசாக உள்ளது.
சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர் இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிறை குறைந்தவர்கள் மற்றும் போசாக்கான உணவுகளை உட்கொள்ளாதவர்களுக்கு இந்த தாக்கம் அதிகமாக உள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் இந்நோய் தாக்கம் அதிகமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்த ராஜா தெரிவித்தார்.