யாழில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் கலாச்சார நிலையம்

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கிணங்க யாழ் மாவட்டத்தில் கலாச்சார மண்டபத்தினை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் ரூபா. 1.7 பில்லியன் நிதி உதவியை வழங்கியுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கு ஏற்ப யாழ் மாவட்டத்தின் கலாச்சார நிலையம் யாழ் பொது நூலகம் மற்றும், புல்லுக்குளம் நீர்நிலையை அண்மித்ததாக இது நிறுவப்படவிருக்கின்றது. இந் நிலையம் வெளி மேடைகளின் மூலம் திறந்தவெளி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைந்த கலாச்சார நிலையமாக மாற்றம் செய்யப்படவுள்ளது.

இத்திட்டத்தினை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. வடக்கு மாகாண மக்களுக்கு பொருத்தமானதோர் சமூக உட்கட்மைப்பு வசதிகளை வழங்குவதற்கும் முக்கியமாக யாழ் மாவட்ட மக்களுக்கு அவர்களின் பண்டைய கலாச்சாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை புத்துணர்ச்சியடையச் செய்தல் ஆகியவை இக் கலாச்சார நிலையத்தின் நோக்கமாக அமையும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர், திரு. வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

இக் கலாச்சார நிலையமானது 600 பேர்களை உள்ளடக்கக்கூடிய தியேட்டர் பாணியிலான கேட்போர்கூடம், ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய பல்லூடக நூலகம், கண்காட்சி கலைக்காட்சிக் கூடங்கள், அருங்காட்சியகம், சங்கீதம், நடனம், இசைக்கருவிகள், மொழி போன்ற கலை அம்சங்களை நடாத்துவதற்கான வகுப்பறை, மொழி ஆய்வுகூடம் மற்றும கேட்போர் கூடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக அமையவுள்ளது.

Related Posts